லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தையும் விக்ரம் திரைப்படத்தையும் இணைக்கும் வகையில் மீம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் “நல்லா இருக்கும் இல்லையா” என பதிவிட்டு உள்ளார். இப்பதிவு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.