பிரபல தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இவர் தனது மருத்துவ செலவுக்கு மயில்சாமி தான் உதவியதாக கூறினார். மயில்சாமி மறைவையடுத்து, பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் இவர் மருத்துவ செலவுக்கு கஷ்டப்படுவதாக தெரிகிறது.