
தமிழகத்தில் சென்ற 2020-ம் வருடம் பரவிய கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக ஓய்வுபெறும் ஊழியர்களின் பண பலன் நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பை எடுக்காமல் அதை ஒப்படைத்து ஊதியமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இம்முறை கால வரையறையின்றி முடங்கி இருக்கிறது.
இதை மீண்டுமாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுகுறித்து அமைச்சரிடம் அளித்த மனுவில், விடுப்பை ஒப்படைத்து ஊதியமாக பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதால் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நிதி நெருக்கடியால் சிரமபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மீண்டும் சரண் விடுப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.