தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாக கன்னியாகுமரி இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என அனைத்தையும் பார்க்க வருடந்தோறும் அதிக மக்கள் வருகின்றனர். அங்கே அமைந்திருக்கும் திற்பரப்பு அருவிக்கு வருடந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் அதிகம் வருவார்கள்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பு பலகையில் “பொதுவெளியில் ஆடை மாற்றினால் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்றினால் என்பதற்கு பதில் எழுத்து பிழையுடன் மற்றினால் என அச்சிடப்பட்டுள்ளது.

அதோடு ஆங்கிலத்தில் “Wearing clothes in public will be fined” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பொதுயிடங்களில் ஆடை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதாக பொருள் விளங்குகிறது. அதனை பார்த்த மக்கள் கேலி செய்தாலும் வெளிநாட்டு பயணிகளுக்கு இது புரியாமல் இருக்கிறது. ஆகவே எழுத்துப் பிழையுடன் காணப்படும் அறிவிப்பு பலகைகளை உடனடியாக மாற்றி புது அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.