சவுதி அரேபியாவில் சமீபத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . பல இடங்களில் குடிநீர், மின்சார தேவை துண்டிக்கப்பட்டுள்ளது.  துபாய் விமான நிலையத்தில் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சி அளித்துள்ளது . விமானங்களும் கப்பல் போல் மழை நீரில் மிதந்தன.

இதனால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன்  காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பாலைவனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த காட்சிகள் வெளியாகி உள்ளது . சவூதி பாலைவனப் பகுதியில் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தில் ஏராளமான ஒட்டகங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன,. சில வாகனங்களும் அதிலிருந்து நபர்களும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காட்சிகள் வெளியாகி மிரள வைத்துள்ளது.