இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் மரத்தில் இருந்து கிளையை கீழே போடுக்கிறார். ஆனால் அது நேராக கரண்ட் வயரிங் மீது விழுகிறது. கரண்ட் கட் செய்யப்படாத நிலையில், கிளை கொஞ்சம் கொஞ்சமாக தீ பிடித்து எரியத் தொடங்குகிறது.

இந்த ஆபத்தான செயல் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், நெட்டிசன்கள் பலர் கண்டிப்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது, முதலில் கரண்டை கட் செய்திருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.