மின் கம்பி ஒன்றைத் தற்செயலாகத் தொட்டதால் மின்சாரம் தாக்கி, ஒரு தொழிலாளி திடீரென மூச்சுவிடுவதை நிறுத்தி மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர், சற்றும் தாமதிக்காமல் அவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அந்த நபர் விடாமல் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்து முதலுதவி செய்ததால், சில நிமிடங்களில் அந்தத் தொழிலாளி மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினார். அதன்பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.
மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி மூச்சு விடுவதை நிறுத்திய தொழிலாளி! உடனே CPR செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றிய ‘ரியல் ஹீரோ!’ 👏#CPR #OIReel #ViralWatch #Oneindia #TamilOneindia pic.twitter.com/rAAgY61XYG
— Oneindia Tamil (@thatsTamil) March 1, 2026
“>
தக்க சமயத்தில் சாதுர்யமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த நபர், இப்போது சமூக வலைத்தளங்களில் ‘ரியல் ஹீரோ’ என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
