சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ நெட்டிசன்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காணொளியில், ஒரு ஆண் தனது குடும்பத்தினரை மோட்டார்சைக்கிளிலும், அதனுடன் இணைக்கப்பட்ட இரும்புத் தள்ளுவண்டியிலும் அழைத்து செலுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது.

வீடியோவில், ஓட்டுநர் பைக்கின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பது காணப்படுகிறது. அவருக்குப் பின்னால் இரண்டு பெண்கள் அமர்ந்துள்ளனர். இதுவே ஆச்சரியமாக இருந்தபோதிலும், உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது பைக்கின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு டிராலி. இதில், ஆறு சிறுவர்கள் நெரிசலாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், அந்தக் குழந்தைகள் இரும்புக் கம்பிகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பயத்துடன் பயணிக்கின்றனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Info Bazzar Net (@infobazzarnet)

சீட் பெல்ட்கள், மெத்தைகள் என எந்தவொரு பாதுகாப்பு வசதியும் இல்லாத நிலையில், குழந்தைகள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு சீரற்ற பயணத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. @infobazzarnet என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர்.

இந்தக் காணொளிக்கு பலவகையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன. சிலர் இதை “மினி பஸ்” என நகைச்சுவையாக கூறியிருந்தாலும், பலர் இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். “ஒரு தந்தை, தனது குழந்தைகளின் உயிரை இப்படி ஆபத்துக்கு உட்படுத்த முடியுமா?” என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஒரு பகுதி நெட்டிசன்கள் இதை வறுமையுடன் தொடர்புபடுத்தி, “பேசும் வசதியின்றி, மாற்றுவழி இல்லாமல் தவிர்க்க முடியாத கட்டாயத்தில் இந்நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என கருதுகின்றனர்.

மேலும் இது போல காணொளிகள் எவ்வளவு வேடிக்கையாக இருந்தாலும், அவை ஒரே நேரத்தில் மிக ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இந்த வீடியோ எழுப்பும் கேள்விகள், சமூக ஊடகங்களில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.