மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது நல்லது. நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிகள் முடியும். பணவரவு அளவோடு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

ஆற்றல் அதிகரிக்கும். சரளமான நிலையில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். கொடுத்த கடனும் வசூல் ஆகும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெண்களுக்கு இன்று மனதில் ஏற்படும் கவலை சரியாகும். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்து கொள்ள முடியும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்