ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் தாமதமாக நடக்கும். நண்பரின் ஆலோசனையால் நன்மை கண்டிப்பாக ஏற்படும். தொழில் வியாபாரம் பலம் பெறும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. குடும்பத்தினருடன் விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்பத்தின் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

சமையல் செய்யும்போது கவனமாக செய்யுங்கள். கூர்மையான பொருட்களையும் கவனமாக பயன்படுத்துங்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காரியங்களை நிதானமாக செய்ய வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்