மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும். நான்கு சுவற்றுக்குள் இருக்கும் குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். பொது இடத்தில் பேச வேண்டாம். புதிய பொருட்களை அவசியபட்டால் மட்டுமே வாங்குங்கள். மாற்றுக்கருத்துடையவர்கள் உங்கள் மீது பறிவு காட்டக்கூடும். மாற்று மதத்தினர் உதவி செய்து கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு கண்டிப்பாக இருக்கும்.

புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படலாம். வரும் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கவனமாக பணிகளில் ஈடுபடுவது நல்லது. எதிலும் முயற்சியுடன் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி இருக்கும். தடைகளை உடைத்து எறிந்து முன்னேற முடியும். நட்பு வட்டம் விரிவடையும். பெண்கள் இன்று யோசித்து சில முடிவுகளை எடுப்பது நல்லது.

வீட்டு தேவை அதிகரிக்கும். பேச்சை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி அதிகரிக்கும். இ‌ன்று மாணவர்கள் முக்கியமான செயலை செய்து பாராட்டு பெறுவீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். புதுப்புது விஷயங்களை யோசித்து கொண்டு இருப்பீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்