ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டையிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.