மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை ராமபுரம் மற்றும் எஸ்.ஆர்.எம். காலேஜ் பகுதிகளில் ஆட்களை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீட்டின் முதல் தளத்திற்குள் மழைநீர் வந்ததால், பலரும் உறவினர்கள், நண்பர்களிடம் அடைக்கலம் கேட்டு உதவி கோரி வருகின்றனர்.

இந்நிலையில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மக்கள் அனைத்து வகையான பயணத்தையும் தவிர்த்து, பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, இதுவரை பெய்த மழையை விட இன்று மாலை அல்லது இரவில் தான் வச்சு வெளுத்து வாங்கும். எனவே, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.