சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, ஒரு டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாக்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3000 மெழுகுவர்த்தி, 13,000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்துள்ளனர். பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.