கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். அதிக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.