இந்தியாவின் பல முன்னணி டூ வீலர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகன சந்தையில் தங்களுடைய  புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இதனால் மிட்-சைஸ் செக்மென்ட்டில் உள்நாட்டு பைக் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்த நிறுவனங்களிடமிருந்து அடுத்தடுத்து வரும் தயாரிப்புகளை மிஞ்சும் வகையில் தனது தயாரிப்பு இருக்க வேண்டும் என்பதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது பல புதிய பைக்குகளை உருவாக்கி வருகிறது.

அந்தவகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 2023 மாடல் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய அம்சங்களுடனும், அசத்தலான லுக்குடனும் வருவதால், பலரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இது 19bhp ஹார்ஸ் பவர், 28Nm டார்க், சுவிட்ச் கியர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக உள்ளதால் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதன் ஆரம்ப விலை ரூ.1.95 லட்சம் (ஷோரூம் விலை) ஆகும்.