இந்தியாவில் தனது X440 மாடல் முன்பதிவை ஹார்லி டேவிட்சன் தொடங்கியுள்ளது இந்த எக்ஸ் 440 மாடல் மூன்று வேரியண்டுகளில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும் இந்த X440 மாடலின் முன்பதிவு கட்டணம் 5000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது 2023 அக்டோபர் மாதம் இந்த மாடல் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் முன்பதிவ ஆன்லைன் வலைதளம், ஹார்லி டேவிட்சன் விற்பனை மையம், தேர்வு செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இடங்களில் செய்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த மாடல் தான் அந்த நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள மாடல் என்று கூறப்படுகிறது. இதன் விலை 2 லட்சத்து 29 ஆயிரம் முதல் 2 லட்சத்து 69 ஆயிரம் வரை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் ஏர் கூல்டு என்ஜின், 440சிசி, ஆயில், சிங்கில் சிலின்டர், மற்றும் 2 வால்வு செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.