சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடு அருள்மிகு கருங்காலீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் இரண்டு மாற்று திறனாளி தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு நான்கு கிராம் பொன் தாலியும் வழங்கினார்.

அத்தோடு திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த வருடம் திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டமும் தொடங்க பட்டுள்ளது.