தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையின் போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நட த்தப்பட்டால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் கட்டாயமாக இந்த கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி ஏதேனும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த மாணவர்களுடைய பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.