தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPIM) இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.

6 இடங்களை சிபிஎம் கோரினாலும், 5 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், தற்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பாக பெரம்பூர் தொகுதியைக் கைப்பற்றுவதில் சிபிஎம் தீவிரம் காட்டி வருகிறது.

2001 முதல் 2016 வரை தங்களின் கோட்டையாகத் திகழ்ந்த பெரம்பூரை மீண்டும் பெற அக்கட்சி முற்படும் வேளையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை திமுக நேரடியாகப் போட்டியிடாமல் இத்தொகுதியை சிபிஎம்-க்கு ஒதுக்கினால், அங்கு டிவி கே மற்றும் சிபிஎம் இடையே தான் பிரதானப் போட்டி நிலவும் என்றும், இது விஜய்க்குச் சாதகமான சூழலை உருவாக்கி அவரது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.