ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் மக்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இந்த மாதம் நிறைய விடுமுறை இருக்குமா என்பதுதான். ஆனால் மார்ச் மாதத்தில் ஒரே ஒரு அரசு விடுமுறை மட்டுமே வருகிறது என்பதுதான் சோகமான செய்தி. மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாதத்தில் 5 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.