உத்தர பிரதேஷ் மாநிலம் பீஜ்னூர் பகுதியை சேர்ந்த சபியா கான் 2020 ஆம் ஆண்டு முராதாபாத் கட்கர் பகுதியைச் சேர்ந்த ஃபர்மானை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சபியா தனது பிறந்த வீட்டுக்கு திரும்பிச் சென்றார். செப்டம்பர் 14, 2025 அன்று இரவு 2 மணியளவில், சபியா தனது சகோதரர் அயான் மற்றும் சில தோழர்களுடன் ஃபர்மானின் வீட்டுக்கு வந்தார்.
கருப்பு உடையும் முகமூடியும் அணிந்திருந்த சபியா, முதலில் வீட்டு வாசலில் கத்தி, திட்டியபின், கதவைத் தட்டினார். கதவு திறக்கப்பட்டவுடன், கையில் இருந்த துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டார். இதில் ஃபர்மானின் தம்பி ஃபைஜான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் வீட்டு வாசலில் இருந்த CCTV கேமராவில் பதிவாகி, இப்போது வைரலாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டால் வீட்டிலிருந்தவர்கள் பயந்து போனார்கள், அக்கம் பக்கத்திலும் பதற்றம் ஏற்பட்டது. ஃபர்மான் கூறுவதன்படி, திருமணத்துக்குப் பிறகு சபியாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் பல முறை பணம் வாங்கியுள்ளார். இப்போது அவர் தன்னை பிளாக்மெயில் செய்வதாக ஃபர்மான் குற்றம் சாட்டுகிறார்.
#मुरादाबाद कटघर थान इलाके मे पति से विवाद के चलते पत्नी ने पति के घर पहुंचकर फायरिंग की घटना का वीडियो सामने आय है उसमे
महिला, उसके भाई और साथियों ने मिलकर किया हमला, पूरी घटना सीसीटीवी में कैद#Moradabad #FiringIncident pic.twitter.com/pLv9YrCtM7— Asif Ansari (@Asifansari9410) September 15, 2025
இதையடுத்து, ஃபர்மான் போலீஸில் புகார் அளித்தார். காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு வந்து, சபியா மற்றும் அவரது தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
