நாடு முழுவதும் அடுத்த வருடம் சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலில் வர இருக்கிறது. குறிப்பாக பீகார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு இயந்திரங்களில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வாக்கு பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலர் படமாக மாற்றப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.