ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசிக்கும் லக்ஷ்மன் சிங் மற்றும் சந்தோஷ் தம்பதிக்கு நவீன் சிங் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று சந்தோஷ் தனது மகன் நவீனிடம் எரிவாயு சிலிண்டர் எடுத்து வரச் சொன்னார். இதனால் கோபமடைந்த நவீன், தனது தாயின் கழுத்தைப் பிடித்து நெரித்தார்.

இதில் சந்தோஷ் மயங்கி கீழே விழுந்தார். ஆனாலும், நவீன் நிறுத்தவில்லை; ஹாக்கி குச்சியால் தனது தாயை கடுமையாகத் தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த முழு சம்பவமும் வீட்டில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து போலீஸ் உடனடியாக செயல்பட்டு, நவீன் சிங்கை கைது செய்தது.