இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 12 சிலிண்டர்களுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எப்படி சிலிண்டர் பெற வேண்டும் என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முதலில் அருகில் உள்ள LPG விற்பனை நிலையத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக், இருப்பிடச் சான்று, பிபிஎல் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைத்தால் மானிய விலையில் நீங்களும் சிலிண்டர் தரலாம்.