நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினியை சமீபத்தில் சென்று சந்தித்தது பேசும் பொருளாக மாறிய நிலையில் அவர் விஜய்க்கு எதிராக இருக்கும் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக தான் சந்தித்ததற்காக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் ஆதரவாளர் ஒருவர் சீமானை விமர்சித்து பேசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்தவர்கள் எல்லோரும் அவர் முன் கைகட்டி காலில் விழுந்து அடிபணிந்துள்ளனர். இதுதான் வரலாறு. இதற்கு சீமானும் விதிவிலக்கு கிடையாது. தற்போதைக்கு தமிழ்நாட்டில் வெட்கமே இல்லாமல் ரஜினிகாந்தின் காலில் விழக்கூடிய ஒரே ஆள் என்றால் அது சீமான் மட்டும் தான்.
விஜய் கிட்ட இருந்து எப்படியாவது என்னை காப்பாத்துங்க இல்லை எனில் விஜயிடம் சொல்லி என்னுடன் கூட்டணி அமைக்க சொல்லுங்கள் என்று ரஜினியின் காலில் விழுந்து கெஞ்சியதாக அவர் கூறியுள்ளார். அதோடு ரஜினியை அவர் பேசிய பேச்சுக்கு போயஸ் கார்டன் பக்கம் கூட விடக்கூடாது. சீமான் மானங்கெட்டு போய் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ரஜினியின் காலில் போய் தற்போது விழுந்து கெஞ்சியுள்ளார். இதற்கு பேசாமல் அவர் தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு விஜய் கட்சியில் சென்று இணைந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் தம்பிங்க கண்ணுல மட்டும் இது பட கூடாது பாவம் 🤣💔pic.twitter.com/hZ2lJ4cPU4
— Mʀ.Exᴘɪʀʏ (@Bloody_Expiry) November 25, 2024
