
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் வாட்சப் உள்ளிட்டவற்றை வெளியாகும் இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.