சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் மற்றும் மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக இருக்கிறது. அதன் பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு காட்டினாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்க அனுமதி கொடுக்கப்படும். அதன் பிறகு போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகிறார்கள்.

இதே கருத்தை தனியார் பேருந்து உரிமையாளர்களும் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் மக்கள் மீது அதிக சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காகத்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் குறுகிய சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படாத நிலை இருப்பதால் அத்தகைய இடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக உரிய முறையில் புகார் கொடுத்தால் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.