கேரளாவில் அனைத்து மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை வழங்கும் விதமாக பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்கும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த நிலையில் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இதன் மூலமாக கேரளாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இணைய வசதி இலவசமாக வழங்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் குறைந்த விலையில் இணைய வசதி கிடைக்கின்றது.

தற்போது 17,412 அரசு நிறுவனங்களில் கேஃபோன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்க கம்பிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை 2105 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.