இன்று நாடு முழுவதும் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது 76 ஆவது சுதந்திரத்தினமா? அல்லது 77 ஆவது சுதந்திரத்தினமா என்பதை தெரிந்துகொள்வோம். இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் கிடைத்தது. எனவே, அந்த தினத்தை முதல் சுதந்திர தினமாக எடுத்துக் கொண்டு, அதுவே முதல் ஆண்டாக கருதலாம். எனவே, சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, அந்த ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால், இந்த ஆண்டு, 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

இதற்கு மாறாக, சுதந்திரம் கிடைத்த 1947 ஆம் ஆண்டை முதல் ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆகஸ்ட் 15, 1948 முதல் ஆண்டாக கருதினால், இந்த ஆண்டு 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். மத்திய தகவல் தொடர்புத்துறை (PIB) அளித்த தகவலின் படி, இந்த ஆண்டு இந்தியாவின் 77வது சுதந்திர தினமாக கருதப்படுகிறது.