இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது . ஆதார் கார்டை ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள ஆதார் சேவை மையம் மூலமாக அப்டேட் செய்து கொள்ளலாம். உங்களின் ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை தெரிந்து கொள்வது அவசியமாகும். அதனை உங்களின் மொபைல் மூலமாகவே மிக எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

  1. அதற்கு முதலில் https://appointments.uidai.gov.in/easearch.aspx என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று நகரம், மாவட்டம் ஆகியவற்றை பதிவுசெய்து  ‘நிரந்தர மையங்களை மட்டும் காட்டு’ என்னும் பகுதியை கிளிக் செய்து  கேப்சாவினை நிரப்ப வேண்டும் .
  2. பின்னர்  ‘ஒரு மையத்தை கண்டறி’ என்னும் பகுதியை கிளிக் செய்து  புதிய பக்கத்தில் உங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அனைத்து ஆதார் மையங்கள் குறித்தான விவரப்பட்டியல் தோன்றும் .
  3. அந்த விவரங்களின் அடிப்படையில் ஆதார் மையத்திற்கு நேரடியாக சென்று ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.