குஜராத் மாநிலத்தில் ஒருவர் விற்கும் ஒரு கிலோ நெய் 2 லட்சம் ரூபாய் வரை விலை போகின்றது. கோண்டலில், ரமேஷ்பாய் ரூபாரேலியா என்ற விவசாயி பசும்பாலில் இருந்தே நெய் தயாரித்து அதில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றார். இந்த நெய்யில் குங்குமப்பூ, மஞ்சள், கொண்டைக்கடலை, ரோஜா இதழ்கள் மற்றும் செம்பருத்தி போன்ற பல்வேறு மூலிகைகளை கலக்குகிறார். ஒரு கிலோ நெய் தயாரிக்க சுமார் 31 லிட்டர் பால் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். இந்த நெய் அதன் மருத்துவ குணங்களால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நெய் உற்பத்தியில் இருந்து பேக்கேஜிங் மற்றும் வீட்டு வாசலில் டெலிவரி செய்து வரும் இந்த வணிகம் இதுவரை 140 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. ரமேஷ் பாய் கடந்த 15 முதல் 17 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகின்றார். இவரின் இந்த நெய் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல நாடுகளில் அதிக தேவை உள்ளது. இவர் தன்னுடைய பொருள்களை விற்பனை செய்து மாத வருமானம் 40 லட்சத்தில் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது வருடாந்திர வருவாய் தற்போது மூணு முதல் 4 கோடி ரூபாய் வரை உள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.