இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. செல்போனால் பெருமளவு நன்மைகள் நடந்தாலும் ஏராளமான தீமைகளும் நிறைந்திருக்கிறது. பல்வேறு சீரழிவான விஷயங்களுக்கும் செல்போன் துணைபோகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியது. இதில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மகளிர் ஆணைய தலைவர் குமாரி, “கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள். டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி ஆள வேண்டும் என்பது முக்கியம்” என தெரிவித்துள்ளார்.