இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விரைவில் மதுரையில், செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு சார்பில் கருத்தரிப்பு மையம் தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக தொடங்கபட உள்ளது.

மேலும், சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஏழை மக்களுக்கும் குழந்தை பெறும் கனவு நனவாகும்.