
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பின்னர் அரையாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது.
ஆனால் பள்ளிக் கல்வித்துறை ஜனவரி 2-ம் தேதி விடுமுறை கிடையாது எனவும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும் இதன் காரணமாக இன்று விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.