நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று  தொடங்குகிறது என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்ததனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது.

இந்த  நிலையில் MBBS கலந்தாய்வு இன்று  தொடங்குகிறது. இதில் இடஒதுக்கீட்டில் 6,326 MBBS இடங்களும், 1,768 பல் மருத்துவ இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் ஜூலை 31 வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது