கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது .

மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டிய நோக்கம் என்ன? அதற்கு நீங்கள் படிக்காமலேயே இருப்பது நல்லது என்று காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களை எச்சரித்து வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.