முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கே.பி முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி, பொன்னையன் மற்றும் அதிமுகவினரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.