முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்த படிவங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் 50 ரூபாய் கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்வில் தகுதி பெரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.