தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இலவச பஸ்பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கான விவரங்களை மாணவர்களிடம் இருந்து பெற ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச பஸ் பாஸ் வழங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பழைய மாதிரி இல்லாமல் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் இது தயாரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் விவரங்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது