தமிழக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி (Laptop) வழங்குவது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தற்போது ஒரு அக்மார்க் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி திட்டம், கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிரடியாகத் தொடங்கி வைத்தார்.
இந்தச் சூழ்நிலையில், சென்னையில் நடந்த திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் லேப்டாப் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் மட்டுமின்றி, இலவச சைக்கிள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் மாபெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
