
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான விவரங்களை அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்களை கேட்கலாம்.