தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, இன்று நடக்கவிருந்த முதன்மைத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாகப் படித்துக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

“திமுக அரசு ஒரு வெற்று விளம்பர மாடல் அரசு; இது இளைஞர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துகிறது” என விஜய் சாடியுள்ளார்.

ஏற்கனவே நகராட்சித் துறைத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்த நிலையில், இந்த ஒத்திவைப்பிற்குப் பின்னால் ஏதாவது பெரிய முறைகேட்டை மறைக்கும் திட்டம் உள்ளதோ என்ற ஐயத்தை அவர் எழுப்பியுள்ளார்.

எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் பட்டாளம் தக்க பாடம் புகட்டும் என அவர் எச்சரித்துள்ளார்.