பிரபல மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் என பல செயலிகள் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் தற்போது அவரது கவனம் வேறு திசையில் திரும்பி உள்ளது. அதன்படி சமூக வலைதளத்தில் மாட்டு இறைச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதோடு பீர், உலர் கொட்டைகள் போன்றவை கொடுக்கப்பட்டு தங்கள் பண்ணையில் இருக்கும் மாடுகள் வளர்க்கப்படுவதாகவும் இது சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தான் என்றும் தெரிவித்துள்ளார். தனது மற்ற அனைத்து செயல்முறைகளை விட இது சுவையான ஒன்று என்று குறிப்பிட்டு தான் மாட்டு இறைச்சியை சாப்பிடும் புகைப்படத்தை மார்க் பதிவிட்டுள்ளார்.