போட்டு பறவை மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் வாழக்கூடிய ஒரு அரிதான பறவை இனம் ஆகும். இவை பார்ப்பதற்கு ஆந்தையை போல உடலமைப்பை கொண்டவை. இந்த பறவை உண்மையில் மிகவும் மென்மையானது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மொத்தம் ஏழு வகைகளில் காணப்படும் இந்த பறவை இனத்தின் சிறிய பறவைகள் 25 சென்டிமீட்டர் வரையிலும் பெரிய பறவைகள் 40 சென்டிமீட்டர் வரையிலும் வளரக்கூடியவை. இவை அதிகபட்சம் 500 கிராம் உடல் எடை கொண்டது. இரண்டு எலுமிச்சை பழத்தை முகத்தில் ஒட்ட வைத்தது போல காணப்படும் இதன் கண்கள் கடும் இருட்டிலும் தெளிவாக தெரியும் சக்தி கொண்டது.

இந்த பறவைகள் மரக்கிளையில் அமர்ந்து கொண்டிருக்கும்போது மரக்கிளைக்கும் பறவைக்கும் வித்தியாசமே தெரியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நிறத்தை துல்லியமாக மாற்றிக் கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும். இதன் வாய் இதன் தலையை விட மிகப் பெரிதாக இருக்கும். இதனால் ஒரு தடவை வாய் திறந்தாலே தன்னைச் சுற்றி பறக்கும் பல பூச்சிகளை இவை உணவாக்கிக் கொள்ளும். மரக்கிளை போல தன்னை மாற்றிக் கொள்ளும் இந்த பறவை தன்னை ஒரு நாள் முழுவதும் கூட உறைந்த நிலையில் வைத்திருக்கும் சக்தி கொண்டது.

அவ்வாறு இருந்தாலும் இதன் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்பு உள்ளிட்ட அனைத்து உடல் இயக்க செயல்பாடுகளும் சீராக இருக்கும். போட்டு பறவையின் கண்கள் மூடிய நிலையிலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று துல்லியமாக கணிக்க கூடியது. தனக்கென்று கூடு எதையும் அமைத்துக் கொள்ளாத இந்த பறவை மரக்கிளைகளில் முட்டையிட்டு குஞ்சு பறிக்கின்றது. அதேசமயம் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளை சிறு பருவத்திலேயே அதன் குஞ்சு பறவைக்கு இவை பயிற்றுவிக்கின்றன. இந்தப் பறவை இயற்கையின் ஒரு அதிசயமாக பார்க்கப்படுகின்றது.