ஹேண்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவை உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளை கொண்ட நாடுகள் ஆகும் . அந்த நாடுகளில் இருந்து 194 நாடுகளுக்கு செல்ல இலவச விசா வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா எண்பதாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.