தனது பழைய சம்பள ரசீதை (PaySlip) எடிட் செய்து நூதன முறையில் அடுத்தடுத்து பல நிறுவனங்களை ஏமாற்றி, வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் இளைஞர் ஒருவர் வேலை வாங்கியுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு வெறும் 4 லட்ச ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர், தனது சம்பளப் பட்டியலை எடிட் செய்து 7 லட்ச ரூபாய் வாங்குவது போல் மாற்றிக் காட்டி, ஒரு நிறுவனத்தில் 8.5 லட்ச ரூபாய்க்கான வேலைக்கான ஆஃபர் லெட்டரைப் பெற்றுள்ளார்.

அதோடு நிறுத்தாமல், அந்த ஆஃபர் லெட்டரை மற்றொரு நிறுவனத்தில் காட்டி, சாமர்த்தியமாக வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் புதிய வேலையைத் தட்டிப் பறித்துள்ளதாக அவரே இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தில்லுமுல்லு வேலை ஐடி (IT) வட்டாரத்தில் பெரும் புகச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், “இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம், மாட்டினால் அவ்வளவுதான்” என்று ஒரு தரப்பினரும், “எனக்கும் கொஞ்சம் எடிட் பண்ணி கொடுங்க பாஸ்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வைரல் பதிவிற்கு ஜாலியாக கமெண்ட் செய்து ரியாக்ட் செய்து வருகின்றனர்.