உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் பேருந்து நிலையத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்லூன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தப் பெண், தனது குழந்தையை விட்டுவிட்டு, ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அவரது கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது, ஆத்திரமடைந்த மாமியார் பேருந்திலிருந்து அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, செருப்பால் சரமாரியாக அடித்தார். அதே நேரத்தில், காதலனைப் பாதுகாக்க முயன்ற பெண்ணை அவரது கணவர் பொது இடத்தில் வைத்துத் தாக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
सास ने बहू के प्रेमी को चप्पलों से पीटा, 2 मिनट में 51 बार मारा
ललितपुर में बस स्टैंड पर सोमवार को हाईवोल्टेज ड्रामा हुआ। यहां एक सास ने अपनी बहू को उसके प्रेमी के साथ पकड़ लिया। पहले तो दोनों में विवाद हुआ।
इसके बाद सास ने अपने चप्पल उतारकर प्रेमी को पीटना शुरू कर दिया।… pic.twitter.com/HgBdjVzu5T
— Srishti Vishwakarma (@Srishtivishwak4) May 25, 2026
“>
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
