வரதட்சணை கொடுமை காரணமாக புனேவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான டிவிஷா என்பவர் சமீபத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில், டிவிஷாவின் கணவர் சமர்த் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.
போலீசாரின் பிடியில் சிக்காமல் இத்தனை நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்த சமர்த் சிங், தற்போது ஜபல்பூர் நீதிமன்றத்தில் திடீரென நேரில் ஆஜராகி சரணடைந்துள்ளார்.
மாடல் அழகியின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளையும், வரதட்சணை சித்திரவதைகளையும் வெளிக்கொண்டு வர காவல்துறையினர் அவரைத் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
