வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்  போல் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை முதல் மழை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதாவது மழை இங்கே ‌ முதல்வர் ஸ்டாலின் மகன் எங்கே என்று அவர் கேட்டுள்ளார். அதோடு ஒரு புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கேமராக்கள் இங்கே. உதயன்னா எங்கே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்று மற்றொரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மிதக்கது இங்கே, சின்னவர் போனது எங்கே என்று பதிவிட்டுள்ளார்.